இந்தியன்-2 வில் இணைந்த நயன்தாரா?

News

இந்தியன்-2 படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறது. கமல் இதுவரை நடித்த படங்களில் இது அதிக பட்ஜெட் என்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஒருவேளை நயன்தாரா சம்மதித்தால், கமலுடன் முதன் முறையாக இணையும் படம் இந்தியன் 2-வாக இருக்கும்.அவர் மட்டுமின்றி, வடிவேலுவும் இந்தியன்-2வில் ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.