இந்தியன் 2' வெளிவருமா?அதிர்ச்சி அளித்த கமல்

News

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் இன்று ஷங்கர், தாய்லாந்தில் இந்தியன் 2' புரமோஷனில் கலந்து கொண்டு இதுகுறித்த பலூன் ஒன்றையும் பறக்கவிட்டார்

இந்த நிலையில் தாம்பரம் தனியார் கல்லூரி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், ''அன்பே சிவம்' , 'தசாவதாரம்', 'வறுமையின் நிறம் சிவப்பு' ஆகிய படங்களை இன்றைக்கு என்னால் எடுக்கமுடியாது எடுத்தால், என் மேல் வழக்கு போடுவார்கள். 'இந்தியன் 2' படம்கூட வெளிவர விடமாட்டார்கள் என நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

.