கோலிவுட்டின் ஹாலிவுட் நடிகர் அஜித் ,விஜய்?

News

சினிமா பிரபலங்களில் பலருக்கும் அஜித் எப்போதும் ஸ்பெஷல். அவர் படங்களை தாண்டி பைக், கார்களை அஜித் ஓட்டுவதை பார்க்க ரசிகர்களுக்கு மிகவும் ஆசை. பல படங்களிலும் ரசிகர்களின் ஆசையை அவர் நிறைவேற்றியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் பாஸ்கி சினிமா பற்றியும் அஜித், விஜய் பற்றியும் பேசியுள்ளார். அப்போது அஜித் பற்றி ஏதாவது கூறுங்கள் என்று கேட்டதற்கு, அவர் கோலிவுட்டின் ஹாலிவுட் நடிகர் என்று கூறியுள்ளார்.

அதோடு அஜித் அவர்களை போல் ஒரு ஜென்டில்மேன் யாரும் கிடையாது என்றார்.

அதோடு விஜய் பற்றி பேசும்போது, யூத் படப்பிடிப்பின் போது மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தேன். பெரிய காரில் உட்கார்ந்து கொண்டிருந்த விஜய் காரை திறந்து என்னிடம் காரில் உட்கார்ந்து கொள்ளுங்கள், நான் ஷாட் முடித்துவிட்டு வருகிறேன் என்றார். அந்த நேரத்தில் அவர் என்னை உள்ளே உட்கார சொல்ல அவசியமே இல்லை என்று கூறினார்.