சி3 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

News

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான சி3 படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான
முறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக படம் குடியரசு தினத்தில் வெளியாகாது என ஏற்கனவே கூறப்பட்டது. மேலும் படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரிலேயே வெளியாகவேண்டிய படம் மீண்டும் தள்ளிபோவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அண்மையில் இப்படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரிச்சலுகை கிடைத்தது