சி3 படத்தின் மூலம் ரஜினிக்கு அடுத்த இடம் பிடித்து சூர்யா அசத்தல்!

News

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான சி3 படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக படம் குடியரசு தினத்தில் வெளியாகாது என ஏற்கனவே கூறப்பட்டது. மேலும் படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ” இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வியாபாரத்தை கணக்குப்போட்டு பார்த்தால் தமிழில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யாதான் இருக்கிறார். இதை சொன்னால் சூர்யாவுக்கே பிடிக்காது. ஏனென்றால் அவர் தற்புகழ்ச்சியை விரும்பாதவர். எனினும் இதுதான் உண்மை என்பதால் இங்கே கூறுகிறேன்” என்றார்.