சி3 ரிலீஸ் மீண்டும் தள்ளிபோகிறது - ரசிகர்கள் வருத்தம்!

News

சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்க்கும் படம் S3. சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாம் பாகமும் எடுக்கப்பட்டது.

ஹரி இயக்க சூர்யாவுடன், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் கடந்த வருட இறுதியிலேயே வெளியாவதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப்போக ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது இறுதியாக சூர்யாவின் S3 படம் பிப்ரவரி 3ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.