சூர்யா, விஜய் சேதுபதி கூட்டணி இணைகின்றதா? ரசிகர்கள் உற்சாகம்

News

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி. மேலும், மாஸ் கிளாஸ் என இரண்டு ஏரியாக்களிலும் கலக்குபவர் சூர்யா.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. சூர்யா தன் 2D நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தை விரைவில் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது, இதில் சூர்யாவும் நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

விஜய் சேதுபதி சம்மதிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.