சூர்யா37 இணையும் பிரமாண்ட கூட்டணி!

News

நட்சத்திர விழாவையும் தாண்டி பிஸியாக இருப்பர் நடிகர் சூர்யா. இவர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

அதற்கான புரொமோஷன் வேலைகளில் சூர்யா மிகவும் பிஸியாக இருக்கிறார். நேற்று மலேசியாவில் இருந்த சூர்யா தற்போது இன்று காலை முதல் ஹைதராபாத்தில் தெலுங்கு கேங் படத்திற்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அப்போது ஒரு பேட்டியில் தன்னுடைய அடுத்த படத்தை கே.வி. ஆனந்த் அவர்கள் தான் இயக்க இருப்பதாக கூறியுள்ளார். அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு இவர்கள் இணையும் மூன்றாவது படம் இது.

இப்படத்தை தாண்டி ஹரி, விக்ரம் குமார் போன்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.