தானா சேர்ந்த கூட்டம் வெளியீட்டிற்கு சிக்கல் ?

News

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க, ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை 2018ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.

இந்த நிலையில்  பைனான்சியரான அன்புச்செழியனுக்கு எதிராகவும், அவர் ஆதரவாளர்களையும் கே.ஈ.ஞானவேல்ராஜா, கடுமையாகத் தாக்கிப் பேசினார். அது மட்டுமல்ல மதுரை மாவட்ட வினியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்

இதனால், அன்புச்செழியன் கடும் கோபமடைந்திருப்பதாகவும், கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளிவர விடாமல் தடுக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.