தொடர் வெற்றிபட இயக்குனருடன் இணையும் சிம்பு

News

சிம்பு AAA பட பிரச்சனைகளுக்கு பிறகு மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் அவரின் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் உலா வருகிறது.

அதாவது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா அடுத்து சிம்புவுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

மோகன் ராஜா அடுத்து மியூசிக்கல் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு சிம்பு பொருத்தமாக இருப்பார் என அவர் கருதியதால் திற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.