நமீதாவுக்குக் கல்யாணம்

News

தமிழில் பொட்டு என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வரும் நமீதா வரும் 24ம் தேதியன்று திருமணம் செய்து கொள்ள உள்ளார். இது பற்றிய அறிவிப்பு நமீதா தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுடன் கலந்து கொண்ட ரைசா அவருடைய டிவிட்டரில் ஒரு வீடியோ மூலம் இதைத் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் நமீதாவும் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நமீதாவின் திருமணம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடாமல் ரைசா வெளியிட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இதன் பிறகு நமீதா தரப்பிலிருந்து அறிவிப்பு வந்தாலும் வரலாம்.