நம்பர் 1 இடத்தில் தனுஷ்

News

நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில் வட சென்னை, விஐபி 2 படங்களிலும் அவர் நடிக்கவுள்ளார். இதைதொடர்ந்து இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம் என அடுத்தடுத்து பிஸியாக இயங்கிவரும் தனுஷ், டிவிட்டரிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறார். இந்நிலையில் டிவிட்டரில் இவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை தற்போது 4 மில்லியனை கடந்துள்ளது. தென்னிந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் முதல் நடிகர் இவர்தான்.