நிவின்பாலி படத்திலிருந்து அமலாபால் விலகல்?

News

36 வயதினிலே இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது நிவின்பாலியை வைத்து மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளில் இயக்கிவரும் படம் காயம்குளம் கொச்சுண்ணி..

1980களில் கேரளாவில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கர கொள்ளையனைப் பற்றிய கதை. அதனால் ஹீரோவைப் போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

படத்தில் அவரது கேரக்டரின் அவுட்லைன் ஸ்கெட்ச் கூட சமீபத்தில் வெளியிட்டார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, சில காரணங்களால் தற்போது இந்தப்படத்தில் இருந்து அமலாபால் விலகிவிட்டாராம். அவருக்கு பதிலாக ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.