பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கும் ஸ்கெட்ச்?

News

இந்த ஆண்டு பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், கலகலப்பு-2, மதுரவீரன் என 9 படங்கள் ரிலீஸ் ஆகயிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரேநாளில் இத்தனை படங்கள் வெளியாவது சாத்தியமில்லை. தியேட்டர் பிரச்னை ஏற்படும் என்பதால், கடைசி நேரத்தில் சில படங்கள் பின்வாங்கி விடும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், தற்போது விக்ரமின் ஸ்கெட்ச் படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை. அதனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் ஸ்கெட்ச் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி விடும் என்று தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அப்பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.