மிஸ்டர் சந்திரமௌலி ரிலீஸ் தேதி

News

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் 'மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் 'மிஸ்டர்.சந்திரமௌலி' வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த படப்பிடிப்பில் துளியும் சோர்வாகமல், முழு ஒத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கவுதம் கார்த்திக். அவரது இந்த உழைப்பை 'மிஸ்டர்.சந்திரமௌலி' அணியும் இப்படத்தின் சண்டை இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 27 ரிலீசுக்கு 'மிஸ்டர்.சந்திரமௌலி' வேகமாக தயாராகி வருகிறது.