மீண்டும் சென்சார் சென்ற S3 - முடிவு என்ன?

News

சூர்யா நடிப்பில் இந்த மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ள படம் சிங்கம் 3. இப்படத்தை ரசிகர்கள் பல எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், இந்நிலையில் இப்படத்துக்கு முதலில் யு/ ஏ சான்றிதழ் கிடைத்தது.

இதனால் படக்குழு முதலில் அறிவித்த ரிலீஸ் தேதியை மாற்றி மீண்டும் சென்சார் குழுவுக்கு அனுப்பியது. இன்று படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் சிங்கம் 3 ரிலீஸ் உறுதிசெய்யப்பட்டு மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளது ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம்