ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் முக்கிய அப்டேட்

News

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி' படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `கபாலி' படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து ரஜினி தற்போது அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். 

இதற்கிடையே ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பூஜையுடன் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.