ரஜினியுடன் இணைந்த சிம்பு - பிரம்மாண்ட மீட்டிங்!

News

அச்சம் என்பது மடமையடா வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று விதமான ரோல்களில் நடிக்கிறார்.

இதில் முதல் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும் இரண்டாவது சிம்புவுக்கு ஜோடியாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் Trend Song எனும் சிங்கிள் டிராக் அண்மையில் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பு இன்றுமுதல் சென்னை ஈவிபி நகரில் படமாகி வருகிறது. அதே இடத்தில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.