ராதிகா சரத்குமார் தயாரிப்பில் நடிக்கும் விஜய் ஆண்டனி

News

‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. விரைவில் ‘எமன்’ படம் திரைக்கு வரத்தயாராக இருக்கிறது.

அடுத்து 'ஐ பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் சரத்குமார்-ராதிகா தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். புதிய இக்குனர் சீனுவாசன் இயக்குகிறார். 

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய விஜய் ஆண்டனி “நான் என் தாய் வீட்டுக்கு வந்துள்ள மன நிலையில் இருக்கிறேன். என் திரை பயணத்தை நான் ஒரு இசை அமைப்பாளனாக தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் எனக்கு வாய்ப்பளித்தவர் ராதிகா மேடம். 

அதன் அடிப்படையில் தான் எனக்கு இசை அமைப்பாளர் வாய்ப்பளித்த இந்த நட்சத்திர தம்பதியினருக்கு படம் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது, வழக்கம் போலவே இந்தப் படத்தின் தலைப்பும் வித்தியாசமாகவே இருக்கும். என்ன என்பது சஸ்பென்ஸ்” என்றார்.