ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்

News

விக்ரமின் துருவ நட்சத்திரம்  மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து படக்குழு விளக்கம் அளிக்காத நிலையில், மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த படம் ஒரே பாகமாக தான் வெளியாக இருப்பதாக விக்ரமுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

அதுமட்டுமின்றி இந்த படத்துக்காக விக்ரம் கூடுமல் சம்பளம் கேட்டதாக வெளியான தகவலிலும் உண்மையில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.