வடசென்னை கதையில் அஜித்

News

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் படம் விசுவாசம். அவரது 58வது படமான இந்த படத்திற்கு யுவன் சஙக்ர் ராஜா இசையமைக்கிறார். நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் அனுஷ்கா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருந்து மாறி யூத் கெட்டப்பில் நடிக்க உள்ளார். அதோடு, இந்தப்படம் வடசென்னை பின்னணியில் நடக்கிறதாம். அதனால் வடசென்னை தமிழும் பேசுகிறாராம் அஜித். 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாகிறது.