விக்ரம் வேதாவை தொடர்ந்து மாதவனின் புதிய படம்!

News

மாதவன், விஜய் சேதுபதி விக்ரம் வேதா கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மாதவன் சற்குணம் படத்தில் கமிட்டானார். இந்நிலையில் இப்படத்தின் தகவல்கள் புதியதாக வந்துள்ளது.

ராஜாளி கழுகு, புலி என காட்டு மிருகங்களை மையப்படுத்திய கதையாக வரும் இப்படத்தில் மாதவனுக்கு வில்லனாக பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் Greg Burridge நடிக்கிறாராம்.

இவர் ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் பாகம் 2 ல் நடித்துள்ளார். இந்த புதிய படம் வரும் ஜுன் மாதம் முதல் எடுக்கப்படவுள்ளது. ஹிந்தியிலும் உருவாகும் இப்படத்திற்கு மாதவன் வசனம் எழுதுகிறார்.

மேலும் இப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க, கயல், தொடரி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வெற்றி இதில் இணைந்துள்ளார். சத்யமங்கலம்,மகாராஷ்டிரா, தாய்லாந்து, லடாக் என காடுகளில் படமாகிறது.