'விசுவாசம்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்

News

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமிபத்தில் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவும் உறுதி செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர்களுடன் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார். அஜித்துடன் ரோபோசங்கர் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.