விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த ஷாரூக் கான் – ஏன்?

News

”விக்ரம் வேதா” படத்தை இந்தியில் ஷாரூக்கானுக்கு கொண்டு சென்றார் மாதவன்.படத்தைப் பார்த்த ஷாரூக், படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் முதலில். அவருக்கு விஜய் சேதுபதி நடித்திருந்த வில்லன் கேரக்டர் பிடித்திருந்ததாம். இப்போது அந்தப் படத்தின் ரீமேக்கில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இதுபற்றி ஷாரூக் தரப்பில் கூறும்போது, ஷாரூக் இந்தப் படத்தில் நடிக்க விரும்பினார். விஜய் சேதுபதி கேரக்டர் பிடித்திருந்ததால் வில்லானாக நடிக்க நினைத்தார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான “ஃபேன்” படத்தின் கிளைமாக்ஸும் இதன் கிளைமாக்ஸும் ஒரு வகையில் ஒரே மாதிரியாக இருப்பதாக நினைத்தார் ஷாரூக். அதனால் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்