விஷால் படத்தின் அடுத்த அப்டேட்

News

 `இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், `இரும்புதிரை' வருகிற பொங்கலுக்கு (2018) ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.